ரயிலில் பட்டாசுகளைக் கொண்டு செல்லத் தடை - மீறினால் சிறை
மதுரை: ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்லக் கூடாது. இதுபோன்ற வெடிபொருட்களை கொண்டு செல்வோர் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
சோழவந்தான் ரயில் நிலையத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதுரைக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் வந்தார். அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்ளிட்டோரை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சோழவந்தான் ரயில் நிலையம் சென்ற அவர் அங்கு வெடிவிபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தீபாவளி பண்டிகையின் போது இது போன்று பட்டாசு பொருட்களை மறைத்து சிலர் ரயிலில் கொண்டு வருகிறார்கள். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை படையினர் உள்ளனர். அவர்கள் இனி இது போன்று பொருட்களை கொண்டு வருபவர்களையும் கண்காணிப்பார்கள்.
ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். முதல் கட்ட விசாரணையில் பட்டாசு வெடி வெடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது.
ரயில்வே சட்டப்படி ரெயில்களில் வெடி பொருட்களை கொண்டு செல்வது குற்றம். இந்த குற்றத்திற்கு 6 வருடம் வரை ஜெயில் தண்டனை விதிக்க இடம் உள்ளது. சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே, சோழவந்தான் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications