கரூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் 873 பேர் சஸ்பெண்ட்
கரூர்: கரூர் அருகே உள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 873 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் - சேலம் பைபாஸ் மெயின் ரோட்டில் உள்ளது எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஹாஸ்டல்கள் கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக அமைந்துள்ளன.
ஹாஸ்டலில் தங்கியுள்ள ஒரு சில மாணவர்கள் இரவு 11 மணிக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக கல்லூரி வாட்ச்மேன் புகார் கூறியுள்ளார்.
இதனால், மாணவர்கள் வைத்திருந்த செல் போனை கல்லூரி நிர்வாகம் சார்பில் பறிக்க முயன்றனர். அதனால் மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்த 873 மாணவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து , அறையை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது, எங்களுக்கு செலவுக்கு பணம் இல்லாத நேரத்திலும், கல்லூரியில் அவரச தேவைக்கும் பெற்றோர்களிடம் செல் போன் மூலமே பேசியாக வேண்டிய நிலை உள்ளது.
ஹாஸ்டலில் தங்கியுள்ள எங்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் என சிலரிடம் பேச உள்ள ஒரு வாய்ப்பு செல் போன் மட்டுமே.
கல்லூரியில் சென் போன் கூடாது என்பதை ஏற்கின்றோம். ஆனால், ஹாஸ்டலில் செல் போன் பேசக் கூடாது என கூறுவதை எப்படி ஏற்க முடியும். கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலில் மாணவர்களுக்கு முறையான வசதிகள் செய்து தரவில்லை. இதை நாங்கள் பல முறை சுட்டிக் காட்டியதால் தான் இது போன்ற செயல்களில் கல்லூரி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications