ஜாமீனில் விடுதலையானார் லெனின் - வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு?
Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து செய்தி ஆசிரியர் லெனின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் லெனின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை கோர்ட், நிபந்தனையில்லாத ஜாமீனில் லெனினை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து லெனின் புழல் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு...
இந்த நிலையில், லெனின் மீதான வழக்கை வாபஸ் பெற அரசுத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications