பெரும் மழையால் நிலச்சரி - பிலிப்பைன்ஸில் 90 பேர் பலி
பெங்கட் (பிலிப்பைன்ஸ்): பிலிப்பைன்ஸின் பெங்கட் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர். கன மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸைத் தாக்கிய பர்மா புயல் காரணமாக பெய்த கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பெங்குட் மாகாணமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் முதலே நிலச்சரிவு தொடங்கி விட்டது. இரவு முழுவதும் நிலச்சரிவு தொடர்ந்தது. பிலிப்பைன்ஸைத் தாக்கிய பர்மா புயல் காரணமாக பெரும் மழை பெய்து பெங்குட் மாகாணத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
இந்த புயல் மற்றும் பெரும் மழை காரணமாக 32 நகரங்கள், 2 பெரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பயம்பாங், அல்கலா, பசிஸ்டா ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் உயரமான கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 16 ரப்பர் படகுகள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக அமெரிக்க கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்க மீட்புப் படையினர் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மா புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பிலிப்பைன்ஸில் மழை கொட்டித் தீர்த்து விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications