பாக். ராணுவ தலைமையகத்தில் தாக்குதல்: பலர் பலி- படையினர் சுட்டு 4 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவத் தலைமையகம் மீது இன்று நான்கு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் இறங்கினர். அவர்களுடன் கடும் சண்டையிட்ட ராணுவத்தினர், நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் உள்ளது. அங்கு இன்று காலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். சரமாரியாக தாக்குதலில் இறங்கினர். அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது ராணுவத் தலைமயைகத்திற்குள் தீவிரவாதிகள் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலி்ல் ராணுவத் தரப்பில் பலர் பலியானதாக கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனராம். ஆனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இன்று தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் கையெறி குண்டுகளை வீசினான். மற்றவர்கள் சரமாரியாக படையினரை நோக்கி சுட்டபடி முன்னேறினர்.
தாக்குதல் நடந்தபோது சில உயர் அதிகாரிகள் உள்ளேயிருந்து வெளியேற முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications