மருத்துவமனையில் மின்வெட்டு - நோயாளி பரிதாப சாவு
டெல்லி: டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயது மூதாட்டி, மின்வெட்டால் உயிரிழந்துள்ளார்.
அவரது பெயர் சாரதா கெளர். கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளானார் அந்தப் பெண். நெடு நேரமாக மின்சாரம் வராததால் துடிதுடித்த அந்த வயதான பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சாரதா கெளருக்கு நாளை 75வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மின்சாரம் இல்லை. இதனால் ஐசியூவில் இருந்த சாரதா பெரும் உயிர்ப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.
ஆனால் மின்வெட்டால் சாரதா கெளர் உயிரிழக்கவில்லை என்றும் ஏற்கனவே அவர் சீரியஸாகத்தான் இருந்தார் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
தற்போது அந்த மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடந்து வருகிறதாம். இதனால் அவ்வப்போது மின்சாரத்தை துண்டித்து விட்டு வேலை பார்க்கின்றனர். இதனால் நோயாளிகள் பெரும் பாதிப்படைவதாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications