தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகூருக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று நடந்தது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்டிரல்-தூத்துக்குடி (0619) சிறப்பு ரயில் 13-ந் தேதி இரவு 7.40 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
தூத்துக்குடி-சென்னை சென்டிரல் (0620) சிறப்பு ரயில் 14-ந் தேதி மாலை 6.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரயில் பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
நாகூர்
சென்னை சென்டிரல்-நாகூர் (0623) சிறப்பு ரயில் 15-ந் தேதி இரவு 7.40 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நாகூர் சென்றடையும்.
நாகூர்-சென்னை சென்டிரல் (0624) சிறப்பு ரயில் 16-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு நாகூரில் இருந்து புறப்படும். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்டிரல் வந்து சேரும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகூரில் இருந்து சென்டிரல் வரும் சிறப்பு ரயில் பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
ராமேஸ்வரம்
சென்னை சென்டிரல்-ராமேஸ்வரம் (0621) சிறப்பு ரயில் 15-ந் தேதி மாலை 6.05 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.50 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
ராமேசுவரம்-சென்னை சென்டிரல் (0622) சிறப்பு ரயில் 16-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 10.35 மணிக்கு சென்டிரல் வந்து சேரும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரல்-ராமேசுவரம் (0625) சிறப்பு ரயில் 17-ந் தேதி மாலை 6.05 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.50 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
ராமேஸ்வரம்-சென்னை சென்டிரல் (0626) சிறப்பு ரயில் 18-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். அடுத்தநாள் காலை 10.35 மணிக்கு சென்டிரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று தொடங்கியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications