நீதிபதி தினகரனை நீக்க கோரும் ராம் ஜேத்மலானி
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதபிதி பி.டி.தினகரனின் பதவி உயர்வை நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான காலேஜியம் நிறுத்தி வைத்துள்ளது. எனவே அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ராம் ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதி பி.டி.தினகரன் வருமானத்திற்கு மீறிய வகையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமளவில் சொத்துக்கள் வாங்கியதாக சர்ச்சை கிளப்பபப்ட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் தற்போது தினகரனின் பதவி உயர்வை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. அவருடன் சேர்த்து பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற தலைமை நீதிபதிகளின் பெயர்களை பதவி உயர்வுக்கு அது அனுமதித்துள்ளது.
இந்த நிலையில், தினகரனை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு பெரும் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிப் புகழ் பெற்ற ராம் ஜேத்மலானி கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான புகார்களைப் பரிசீலித்த பின்னர் அதில் முகாந்திரம் இரு்பபதாக கருதிய பின்னர்தான் அவரது பதவி உயர்வை காலேஜியம் நிறுத்தி வைத்துள்ளது. அப்படி இருக்கையில், எப்படி பி.டி.தினகரன் நீதிபதி பதவியில் நீடிக்க முடியும். எனவே அவரை நீக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications