அல்-கொய்தாவுடன் தொடர்பு: பிரான்ஸ் அணு விஞ்ஞானி கைது

அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட பிரான்சைச் சேர்ந்த டாக்டர் அடலீன் ஹெசெர் (32) என்ற அந்த விஞ்ஞானி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள் செர்ன் அமைப்பி்ன் Large Hadron Collider என்ற அணுப் பிளவு ஆராய்ச்சி மையத்தில் பிளாக்ஹோல்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்.
லண்டனில் ருத்தர்போர்ட் ஆப்பிள்டன் லேப் என்ற அரசின் மிக ரகசியமான அணு ஆராய்ச்சி மையத்திலும் பணியாற்றியவர் இவர்.
இவர் அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்க பிரிவுடன் மெயில்கள் மூலம் தொடர்பில் இருந்ததை பிரான்ஸ் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
மேற்கத்திய நாடுகளைத் தாக்குவது குறித்த, குறிப்பாக பிரிட்டனைத் தாக்குவது தொடர்பான அல்-கொய்தாவின் திட்டங்களுக்கு இவர் பல தகவல்களைத் தந்து வந்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணு ஆராய்ச்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவர் அல்-கொய்தாவுடன் இணைந்து திட்டமிட்டு வந்துள்ளார்.
இவரது செயல்களை ரகசியமாக கண்காணித்து வந்த பிரான்ஸ் மற்றும் இஙகிலாந்தின் உளவுப் பிரிவினர் போதிய ஆதாரங்கள் சிக்கியதையடுத்து கைது செய்தனர். தனது குற்றங்களை இவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவருடன் கைது செய்யப்பட்ட இவரது தம்பி டாக்டர் ஹலீம் விடுவிக்கப்பட்டுவிட்டார்.
அடலீன் ஹெசெரின் இ-மெயில்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்காணித்து, அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உளவுப் பிரிவினருக்கு தகவல் தந்துள்ளனர். இதையடுத்து அவரை இந் நாடுகளின் உளவுப் பிரிவினர் கண்காணி்த்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications