இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்
வாஷிங்டன்: மொரீசியஸ் தீவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.15 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.0 புள்ளிகளாகப் பதிவானது.
மொரீசியசின் போர்ட் லூயிஸ் நகருக்கு வட கிழக்கே 1,041 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இப் பகுதிகளில் உள்ள சிறிய தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேகாலயா, அஸ்ஸாமில்..
அதே போல மேகாலயா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று பகல் 11.56 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாக இருந்தது.
இந்திய-மியான்மார் எல்லையிலும்..
அதே போல இந்திய-மியான்மார் எல்லையிலும் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் இது 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications