ரூ. 75 லட்சம் சிங்கப்பூர் கடத்தல் தங்கம் சிக்கியது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5.5 கிலோ எடை கொண்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி சமயத்தில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வழியாக பலர் தங்க நகைகள் கடத்தப்பட இருப்பதாக சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைதத்து.
இதையடுத்து அவர்கள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள் 18 பேர் மீது சுங்க துறையினருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்களது பைகளில் சுமார் 200 முதல் 300 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. சுங்கா இலாகாவினர் அவர்களிடம் மேலும் விசாரிக்கையில் அவர்கள் அனைவரும் இது தங்களுடையது அல்ல என்றும், யாரோ ஒரு நபர் விமான நிலையத்தில் இதை கொடுத்தார்.
இவற்றை சென்னை விமான நிலையத்துக்கு வரும் ஒருவரிடம் ஒப்படைத்தால் ரூ. 5 ஆயிரம் தருவதாக கூறினார். சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வரும் தாங்கள் இந்த பணத்துக்காக ஆசைப்பட்டு அதை வாங்கி வந்ததாக கூறினர்.
இதை தொடர்ந்து வந்த மலேசியா மற்றும் கொழும்பு விமானத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 4 பேர் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையும் சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் ஒரு நாள் இரவில் மட்டும் சுங்க இலாகாவினர் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள 5.5 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் பிடிபட்ட 22 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications