'அந்த' ஆசை காட்டி 'அட்டாக்' செய்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

Joanne and Peter
லண்டன்: தோட்டத்துக்குப் போய் ஜாலியாக இருக்கலாம் என்று ஆசை காட்டி கணவரை அழைத்துச் சென்று, புல்தரையில் படுக்க வைத்து, அவர் எதிர்பாராத நேரம் பார்த்து கழுத்தில் வெட்டி, அவர் இறந்திருப்பார் என்று முடிவு செய்து, தனது கள்ளக் காதலனோடு உற்சாகமாக இருப்பதற்காக வீட்டுக்குத் திரும்பிய பெண்ணை, வீட்டில் காத்திருந்து போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்தப் பெண்ணின் பெயர் ஜோனா ஹேல். வயது 39 ஆகிறது. இவரது கணவர் பெயர் பீட்டர். இவருக்கு 43. கல்யாணமாகி 9 ஆண்டுகளாகிறது. ஜோனாவுக்கு வித்தியாசமான பழக்கம் உண்டு. அதாவது வீட்டில் செக்ஸ் வைத்துக் கொள்வதை விட, வீட்டுக்கு வெளியேதான் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

இந் நிலையில், சமீபத்தில் கணவரை வாருங்கள், 'வெளியே' போய் விட்டு வரலாம் என்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்திருக்கிறார் ஜோனா. 'வழக்கமான விசிட்தானே' என்று படு ஜாலியாக கிளம்பியுள்ளார் பீட்டர்.

கிளம்புவதற்கு முன்பு சில வேலைகளைச் செய்துள்ளார் ஜோனா. அவருக்கு ஒரு மருந்தைக் கொடுத்துள்ளார். இது செக்ஸ் ஆசையை அதிகம் தூண்டும். எனவே சாப்பிடுங்கள் என்று கொடுத்துள்ளார்.

இந்த மூலிகை மருந்தின் லத்தீன் பெயர் எபிமீடியம். இது வயகாராவைப் போன்றதாம்.

பின்னர் வீட்டை விட்டு கணவருடன் வந்த ஜோனா அருகில் உள்ள இருளடைந்த மரங்கள் நிறைந்த பகுதிக்குள் புகுந்தார்.

ஓரிடத்தில் கணவரைக் கட்டிப்பிடித்து கொஞ்சிய ஜோனா திடீரென கத்தியை எடுத்து பீட்டரின் தொண்டையில் குத்தினார். இதை எதிர்பாராத பீட்டர் தடுமாறி விழுந்தார்.

என்ன நடக்கிறது என்பதை அவர் அனுமானிப்பதற்குள் அடுத்த குத்து கழுத்தில் விழுந்தது. மேலும், ஆட்டை அறுப்பது போல தொண்டை மற்றும் கழுத்தை மாறி மாறி அறுக்க ஆரம்பித்தார் ஜோனா.

ரத்தம் வெளியேற மயங்கி விழுந்தார் பீட்டர். 'மேட்டர் ஓவர்' என நினைத்த ஜோனா தடதடவென அங்கிருந்து ஓடினார்.

அந்தப் பகுதியை விட்டு ஓட்டமும், நடையுமாக அவர் வேகமாக போனதை அந்தப் பக்கம் வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து குழம்பினார். ஏன் இந்த பெண் இப்படிச் செல்கிறார் என்று அவருக்குக் குழப்பம்.

அந்த நபரைப் பார்த்த ஜோனா, அங்கே யாரோ குத்துப் பட்டுக் கிடக்கிறார், யார் என்று தெரியவில்லை என்று கூறி விட்டு போனார்.

பீட்டரை குத்தி விட்டுத் தப்பிய ஜோனா, தனது காரில் பிரிஸ்டல் பார்க்வே ரயில் நிலையத்திற்கு சென்று தனக்காக காத்திருந்த புதிய காதலன் பிலிப் சுடோலுடன் தன் வீட்டுக்குக் கிளம்பினார்.

பிலிப்பும், ஜோனாவும், இன்டர்நெட் மூலம் அறிமுகமானவர்களாம். இணையத்தின் மூலம் காதல் மலர்ந்ததுவிடவே பீட்டர் 'வேஸ்ட்' என்ற முடிவுக்கு வந்த ஜோனா, அவரை கொல்ல முயன்றுள்ளார்.

வீட்டுக்கு வந்த ஜோனாவுககு முன்பே வந்து காத்திருந்தனர் போலீஸார்.

கணவரைக் கொலை செய்ய முயன்றது, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காயப்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+