பொருளாதார வீழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது!-அமெரிக்க நிறுவனம்

இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த 44 பிரபல நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் முழுமையாக கருத்துக் கேட்பு நடத்தியுள்ளது.
அவர்களில் 80 சதவிகிதத்தினர், நெருக்கடி காலம் முடிந்துவிட்டதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து NABE அமைப்பின் புதிய தலைவராகப் பதவியேற்கவுள்ள லின் ரீஸர் கூறுகையில், "நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. பெரும்பான்மையான தொழில் அமைப்புகள் அப்படித்தான் நம்புகின்றன. அதே நேரம் மீட்சிக்கான அறிகுறிகள் எதிர்பார்க்கிற அளவுக்கு வேகமாக இல்லை என்பதும் உண்மைதான்" என்றார்.
பொருளாதார மந்த நிலை அமெரிக்காவில் 2007-ம் ஆண்டு துவங்கியது. அமெரிக்க வீட்டு வசதித்துறை சரிந்ததால் துவங்கிய வீழ்ச்சி இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வீழ்ச்சி நிலையிலேயே அமெரிக்கப் பொருளாதாரம் தவிப்பது இதுவே முதல்முறை.
இந்த ஆண்டு மந்தத்திலிருந்து மீட்சி வந்துவிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு காலாண்டுகள் முடிந்தும் இன்னும் வெளிப்படையான மாறுதல்கள் தெரியவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயம் பொதுமக்கள் உணரும் வகையிலான பொருளாதார மாறுதல்கள் தெரியத் துவங்கும் என இந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications