சேலம் சாலை விபத்து-2 மருத்துவ மாணவிகள் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் நடந்த சாலை விபத்தில் இரு பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள், டாக்டர் ஆகியோர் பலியாயினர்.
சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மலேசியாவைச் சேர்ந்த பாத்திமுசோலிகா அஜீஸ் (22), ஆர்த்தி ஸ்ரீகுமார் (21) ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் மோஷின், டாக்டர் சப்ரி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சீரகபாடி என்ற இடத்தில் பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் இந்தக் கார் மீது எதிரே வந்த பஸ் மோதியது.
இதில், மலேசிய மாணவி, டாக்டர் சப்ரி, ஆர்த்தி ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர். டாக்டர் மோஷின் பலத்த காயமடைந்தார்.
பலியான மலேசிய மாணவியின் உடல் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவரது நாட்டுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications