தாய்-மகன் கொலை: தவறான தகவல்..துப்பறியும் நிறுவன ஊழியர் கைது

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி. இவரது கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அனந்தலட்சுமியும், அவரது 13 வயது மகன் சூரஜூம் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவரது செல்போன் மற்றும் நகைகள் திருடு போயிருந்தன.
இந்தக் கொலை வழக்கில் அனந்தலட்சுமி குடும்பத்ததுக்குப் பழக்கமான வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலா, உதயராஜ் ஆகியோரை கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.
மேலும் வேல்முருகனின் காதலி தன்யாவும் கேரளாவில் பிடிபட்டார்.
இந் நிலையில் ஒரு வாரப் பத்திரிகையில், இரட்டைக் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். உண்மையான குற்றவாளி யார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக செய்தி வெளியானது.
இதையடுத்து துணை கமிஷனர் சம்பத்குமார் தலைமையில் இது குறித்து விசாரணை நடந்தது. விசாரணையில் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் இந்த தவறான தகவலை கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர் கிருஷ்ணகுமார், அவரது நண்பர் செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த இரட்டைக் கொலை பற்றி விசாரணை நடத்தினோம். ஆனால் எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து எங்களுக்கு கண்டுபிடிக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் கொலையாளி பற்றி வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறினோம். அதனை நம்பி அவர் இந்த தகவலை வார பத்திரிகைக்கு தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications