என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு அதி நவீன ஆயுதங்கள்
மனீசர் (ஹரியாணா): என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினருக்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹரியாணா மாநிலம் மனீசர் நகரில் நடந்த என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் தீவிரவாத மிரட்டல்களை சந்திக்க இந்தியா எப்போதும் தயார். இதற்காக என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினருக்கு உதவுவதற்காக அதி நவீன ஆயுதங்கள், ஹைடெக் சாதனங்கள் வாங்கப்படும்.
வரும் நாட்களில் என்.எஸ்.ஜி. படையினர் மிக நவீன படையினராக மாறுவார்கள்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினர் செய்த உயரிய தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது.
மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்திர சிங் மற்றும் ஒட்டுமொத்த படையினரின் தீரத்தையும், தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றார் ப.சிதம்பரம்.
தக்க பதிலடி கொடுப்போம்...
இதற்கிடையே, இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா விடுத்துள்ள மிரட்டல் குறித்து ப.சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
மும்பையைப் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுப்போம். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திறன் பாகிஸ்தானிடம் இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications