எம்.ஏ 'கலைஞர் சிந்தனை' படிப்பு அறிமுகம்-சர்ச்சை!

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானது, எம்.ஏ. பெரியார் சிந்தனைகள், எம்.ஏ அண்ணா சிந்தனைகள் மற்றும் எம்.ஏ கலைஞர் சிந்தனைகள் ஆகிய மூன்று முதுநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்பது.
இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநில அரசின் பல்கலைக்கழகம், அந்த மாநில முதல்வர் பெயரில் படிப்பைத் தொடங்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சைதான் அது.
முன்னாள் தலைவர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் குறித்த ஆய்வுப் படிப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இருப்பினும் தற்போது பதவியில் உள்ள ஒரு முதல்வரின் பெயரில் படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
துணைவேந்தர் நினைத்தவுடன் என்தப் படிப்பையும் தொடங்கி விட முடியாது என்றும், பல்கலைக்கழக சிண்டிகேட் உள்ளிட்ட குழுக்களில் இதுகுறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.கே.பொன்னுச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், எந்தப் புதிய படிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள படிப்புகள் தேவையற்றவை என்று நான் கருதுகிறேன்.
மாணவர்கள் மத்தியில் இந்த படிப்புகளுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் நிறையப் பேர் சேருவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது துணைவேந்தரால் மட்டும் முடிகிற காரியமல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் கல்விக் கவுன்சில் ஆகியவை இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.
சமீப காலமாக அரசியலும், கல்வியும் பிரிக்க முடியாத அளவுக்கு கலந்து போய் விட்டன. எனவே இதுபோன்ற மேலும் பல படிப்புகள் எதிர்காலத்தி்ல் புற்றீசல் போல புறப்பட்டு வரும் என்பது தவிர்க்க முடியாது என்றார் பொன்னுச்சாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications