கல்லூரி விடுதியில் மோதல்-3 பேர் மண்டை உடைப்பு
நெல்லை: பாளையங்கோட்டை அரசு விடுதியில் கல்லூரி மாணவர்களிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் மண்டை உடைந்தது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதி அறைகள் உள்ளன. இதில் சுமார் 105 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று மாலை விடுதி சுவற்றில் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பெயரை எழுதி வாழ்க என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த வேறு சில மாணவர்கள் அதை எழுதியது யார், எதற்கு எழுதப்பட்டது என சில மாணவர்களிடம் கேட்டு தகராறு செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதைப் பார்த்த மாணவர்கள் சக்திவேல், ரஞ்சித், அப்பாத்துரை, ஆகிய 3 பேரும் இரண்டு தரப்பையும் விலக்கி சாமாதனம் செய்தனர். அப்போது ஒரு கும்பல் சாமாதானம் செய்த மாணவர்களை உருட்டு கட்டையால் தாக்கியது.
இதில் அவர்களது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் துடித்த 3 மாணவர்களையும் பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயமடைந்த மாணவர் சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் மேலகரம்பையை சேர்ந்தவர். மாணவர் ரஞ்சித்துக்கு கயத்தாறு அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமம். அப்பாததுரைக்கு மூலக்கரைப்பட்டி ஆகும். இவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications