பத்திரிக்கையாளர் வழக்கு- நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உத்தரவு
சென்னை: நடிகர், நடிகையர் மீது பத்திரிக்கையாளர் அமைப்புகள் கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக வர்ணித்துப் பேசியதாக பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி அன்பழகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், நடிகர்கள் விஜயக்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களையம், அவர்களது குடும்பத்தினரையும் மிகவும் தரக்குறைவாக, ஆபாசமாக பேசினர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி உரிய வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் தரப்பட்டது.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், வருகிற 23ம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு அன்றைய தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications