புலி ஆதரவு இணையத்தளம் புதினம் திடீர் மூடல்
சென்னை: விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வந்த, உலகம் பார்ததிராத உக்கிரப் போரின்போது, போர்க்கள நிலவரத்தை துல்லியமாக கொடுத்து வந்த தளம் புதினம். விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளமாக விளங்கிய புதினம், போர்க்கள நிலவரங்களை மிகத் துல்லியமாகவும், கிடைத்தற்கரிய புகைப்படங்களோடு வெளியிட்டு வந்தது.
மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் செல்போன் மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் புதினம் இணையத்தளம் திடீரென மூடப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தின் முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.
புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications