லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் பெக்காமை தடுத்து சோதனையிட்ட அதிகாரிகள்
லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சோதனை நடந்ததால் பெரும் அதிருப்திக்குள்ளானார் பெக்காம். எரிச்சலைடந்தார். தனது அமெரிக்க ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு நான் வெளியேற வேண்டும், ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுள்ளார். ஆனாலும் அவர்களாலும் பாதுகாப்பு சோதனையிலிருந்து பெக்காமை மீட்க முடியவில்லை.
அக்குவேறு ஆணி வேறாக பெக்காமின் உடமைகளை சோதனையிட்டு முடித்து விட்டுத்தான் அதிகாரிகள் அவரை வெளியேற அனுமதித்தனர்.
தனது மனைவியும், முன்னாள் ஸ்பைஸ் கேர்ளுமான விக்டோரியா பெக்காம் மற்றும் 2 மகன்களுடன் சில காலமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் பெக்காம்.
அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்துக் கிளப்பான லாஸ் ஏஞ்சலெஸ் கேலக்ஸிக்காக அவர் ஆடி வருகிறார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
இந்தியாவில் பிரபலமான ஷாருக் கானை சமீபத்தில் நியூயார்க் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வறுத்து எடுத்தது இந்தியாவில் பரபரப்பான செய்தியானது. ஆனால் உலகறிந்த ஒரு கால்பந்து நட்சத்திரத்தையும் அமெரிக்க அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வெறுப்படித்துள்ள சமாச்சாரம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications