Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை சிறையில் இந்தியர்கள் - ராஜபக்சேவுக்குத் தெரியாதாம்: திமுக எம்.பி.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை சிறையில் வாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன்.

இலங்கை சென்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் இதுகுறித்துக் கூறுகையில், 40க்கும் மேற்பட்ட தமிழகம், கேரளம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கை சிறையில் வாடி வருவது குறித்து ராஜபக்சே மற்றும் அவரது தம்பியு்ம், மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்சேவிடம் நாங்கள் கூறியபோது அதுகுறித்து அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

இதுதொடர்பாக இந்தியாவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லையே என்றும் தெரிவித்தனர். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து ஒரு போதும் எழுப்பப்படவில்லையே என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

இலங்கை சிறையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இவர்கள் அடைபட்டுள்ளனர். இந்திய அதிகாரிகள் தங்களை விடுவிப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து அவர்களில் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில், இலங்கையில் 43 இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வெளிக்கடையில் 28 பேரும், நெகம்போவில் 10 பேரும், அனுராதபுரத்தில் 5 பேரும் சிறையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் பலர் 16 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடி வருகின்றனர். இந்திய அதிகாரிகள் இவர்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூரிடம் கேட்டபோது, இலங்கை சிறைகளில் வாடி வரும் இந்தியர்களை மீட்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு கால தாமதமாகும் என்றார் அவர்.

இளங்கோவன் கூறுகையில், இவர்களை விடுவிப்பது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் உரிய முறையில், இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தால் நிச்சயம் அது அதிபரின் பார்வைக்கு வந்திருக்கும்.

நாங்கள் ராஜபக்சேவுடன் பேசியபோது இதுகுறித்து கேட்டோம். அப்போது அதிபர் ராஜபக்சே, அதிகாரிகளிடம் தகவல் கேட்டார். ஆனால் அவர்களிடம் அதுகுறித்த தகவலே இல்லை.

இந்தியக் கைதிகளை விடுவிப்பது குறித்து மிகவும் சாதகமான எண்ணத்தில்தான் அதிபர் இருக்கிறார். அவர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்புவதிலும் அவர் ஆர்வமாக உள்ளார்.

எனவே இந்த விவகாரத்தை இந்திய அரசு அதிகாரிகள், இலங்கைத் தரப்புடன் முறையாக அணுகி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து விரைவில் வெளியுறவு அமைச்சகத்திற்கு நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளோம் என்றார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில், இந்த விவகாரத்தை மத்திய அரசுதான் கையாள வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+