சென்னை விமான நிலையத்தில் 'கருணாநிதி' ரகளை!
சென்னை: சென்னை, பம்மல் நகராட்சித் தலைவரான திமுகவைச் சேர்ந்த வி.கருணாநிதியும், அவரது நண்பர்களும் சென்னை விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டது. நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக ரூ. 200 அபராதமும் விதிக்கப்பட்டது.
பம்மல் திமுக நகராட்சித் தலைவராக இருப்பவர் வி.கருணாநிதி. இவர் தனது நண்பர்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை நகராட்சிக்குச் சொந்தமான காரில் விமான நிலையம் சென்றார்.
வாகனங்கள் வெளியேறும் பகுதி வழியாக கருணாநிதியின் பொலிரோ கார் உள்ளே நுழைந்தது. இதைப் பார்த்த காவல் பணியில் இருந்த சிறப்புப் போலீஸ் படை காவலர் செல்லையா குறுக்கிட்டு இது கார்கள் வெளியேறும் பகுதி, இந்தப் பகுதி வழியாக உள்ளே நுழையக் கூடாது என்று கூறித் தடுத்தார்.
இதைக் கேட்ட கருணாநிதி, இது அரசு வாகனம், அரசு வாகனத்திற்கு விதிமுறையே கிடையாது. எங்கே வேண்டுமானாலும் போகலாம், எப்படி வேண்டுமானாலும் போகலாம், நீ தடுக்காதே என்று கூறியுள்ளார். பின்னர் தனது கார் டிரைவரிடம் காரை நிறுத்தாமல் உள்ளே போ என்று உத்தரவிட்டார்.
உள்ளே நுழைந்த கார் கார்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கொண்டு போய் நின்றது. பின்னர் கருணாநிதி உள்ளிட்டோர் காரிலிருந்து இறங்கி, சர்வதேச முனைய வளாகத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் போனது. விரைந்து வந்த அவர்கள், காரை 'டோ' செய்து வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி சங்கிலி போட்டுக் கட்டி விட்டனர்.
கருணாநிதி உள்ளிட்டோர் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்தபோது கார் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கோபமடைந்த கருணாநிதி, விமான நிலைய அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். இது அரசு கார், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம், எப்படி நீங்கள் செயின் போடலாம் என்று கத்தியுள்ளார். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதை சட்டையே செய்யவில்லை.
நோ பார்க்கிங்கில் கார் நிறுத்தியுள்ளீர்கள். எனவே ரூ. 200 அபராதம் கட்டி விட்டு காரை கொண்டு செல்லுங்கள் என்று கூறி விட்டனர். மத்திய அரசு ஊழியர்களிடம் தனது பப்பு வேகாது என்பதை உணர்ந்த கருணாநிதி, வேறு வழியில்லாமல் அபராதப் பணத்தைக் கட்டி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து விமான நிலைய போலீஸில், காவலர் செல்லையா புகாராகக் கொடுத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications