செக்ஸுக்காக விற்கப்படும் பிரிட்டன் சிறுமிகள்!

Subscribe to Oneindia Tamil

Scotland Yard
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிகள், பெரும் பணக்காரர்களின் காமப் பசிக்காக விற்கப்படுகின்றனராம். ஒரு மணி நேரத்திற்கு உல்லாசமாக இருக்க 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு இவர்கள் வாடகைக்கு விடப்படுகிறார்களாம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில பெற்றோர் தங்களது டீன் ஏஜ் மகள்களை இவ்வாறு விற்பனைக்கும், வாடகைக்கும் விட ஆர்வம் காட்டி வருவதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பகீர் செயலை ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர். ஒரு போலீஸ் குழு, சிறுமிகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்த மான்செஸ்டரைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணை இதுதொடர்பாக அணுகினர். தாங்கள் போலீஸ் என்று கூறாமல் அவர்களை அணுகினர்.

மேற்கு லண்டனைச் சேர்ந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போலீஸ் குழுவினர் அழைத்துச் செல்லபப்ட்டனர். அவர்கலிடம் 14 முதல் 23 வயது வரையிலான ஆறு பெண்கள் காட்டப்பட்டனர்.

இதுதவிர இளம் சிறுமியரையும், வயதுக்குக் கூட வராத சிறுமிகளையும் இந்தக் குழுவினர் எப்படி மோசடியாக மடக்குகின்றனர், விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர் என்பதையும் ஆதாரப்பூர்வமாக படமாக்கிக் கொண்டனர்.

இந்தக் கும்பலுக்கு நியூகேசில், லிவர்பூல் ஆகிய நகரங்களிலும் நிறையத் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது.

கன்னித்தன்மையுடன் கூடிய முதல் முறையாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுமிகளாக இருந்தால் (அதாவது 12 வயது அல்லது அதற்கும் குறைவான சிறுமிகள்) அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 50 ஆயிரம் பவுண்டுகள் என விலை நிர்ணயித்துள்ளனர்.

இந்த பகீர் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அந்தக் கும்பலை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் பலருக்கும் தற்போது வலை வீசிப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பிறந்த சிறுமியரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மிகவும் அரிதானது. ஆனால் தூர கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெருமளவிலான சிறுமிகள் பெருமளவில் இங்கிலாந்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். செக்ஸ் அடிமைகளைப் போல இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுமிகளை, அதுவும் பெரும்பாலான நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களே விபச்சாரத்திற்கு அனுப்பும் செயல் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2012ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் விபச்சாரம் பெருமளவில் வெடித்துக் கிளம்பும் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+