உஸ்பெகிஸ்தான்: ஜெ. புகாருக்கு திமுக எம்.பி. மறுப்பு
கரூர்: உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகாருக்கு இந்த சர்ச்சையில் அடிபட்ட கரூர் தொகுதி திமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு இரண்டு தொழில் அதிபர்களை மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் செயலர் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் எஸ்.கே.பி. சுந்தரம் (என்னுடைய மகன்) என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள எஸ்.கே.பி.சுந்தரம், முகுந்த்விஜயன் ஆகியோருக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எனது உறவினர்களும் இல்லை. இந்தச் செய்தி வெளியான அன்றே மறுப்பு அறிக்கை வெளியிட்டு, ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.
முழு விவரங்களை அறிந்து கொள்ளாமல் எனது பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அறிக்கையில் நான் 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார். நான் 2004-09 மட்டுமே மக்களவை உறுப்பினராக இருந்தேன். மற்ற இரண்டு முறை அதிமுகவினரே மக்களவை உறுப்பினராக இருந்துள்ளனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார் கே.சி. பழனிச்சாமி.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications