சோனியா பெயரில் மோசடி வசூல் செய்த மதுரை பெண் பிரமுகர்!
மதுரை: காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா பெயரில் மதுரையைச் சேர்ந்த பெண் பிரமுகர் யாழினி என்பவர் மோசடி வசூல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையைச் சேர்ந்தவர் யாழினி. காங்கிரஸ் கட்சிப் பிரமுகர். இவர் பழநி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பெண்கள் சிலரை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து, ஐ.என்.டி.யூ.சி. தேசிய கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தால், லோக்சபாத் தேர்தலுக்கு பின் மத்திய, மாநில அரசிடம், பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்காக நடைபெற உள்ள விழாவிற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பழநிக்கு வருகை தர உள்ளதாக கூறி அதற்கு முன்பணமாக, உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ 450 வசூல் செய்துள்ளார். இதை நம்பி சுமார் 600 பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு தலா ஒரு சேலை இலவசமாக வழங்கி, மதுரையில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்திற்கும் அழைத்து சென்றுள்ளார்.
தேர்தலுக்கு பின்பு, யாழினியை உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு கடன் கேட்டுள்ளனர். பதில் தராமல் சமாளிக்கவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பழனி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, யாழினி பழனி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு எஸ்.ஐ.,மோகன்ராஜ் மற்றும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர் கொடுத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications