சத்யம் நிறுவனத்தில் 6500 பேர் பணி நீக்கம்!

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ரூ.7800 கோடி மோசடியால் பெரும் சரிவுக்குள்ளான சத்யம் இப்போது மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். சத்யம் சரிவுக்குப் பின்னர் படிப்படியாக 30 ஆயிரமாகக் குறைந்துவிட்டது ஊழியர் எண்ணிக்கை.
மகிந்திரா நிறுவனத்தின் கைக்கு நிர்வாகம் மாறியபோது, யாரையும் வேலையை விட்டு நீக்க மாட்டோம் என அறிவித்தனர். ஆனால் அடுத்த சில தினங்களில் 8000 பேரை கட்டாய விடுப்பில் அனுப்பினர்.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இவர்களில் 1500 பேரை மட்டும் திருப்பி அழைத்துக் கொண்ட நிர்வாகம், மீதியுள்ள 6500 பேருக்கு நோட்டீஸ் ஒன்றை இமெயில் மூலம் அனுப்பியுள்ளது.
அதில் 'உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த சத்யம் நிர்வாகம், இவர்களை இப்போதைக்கு தற்காலிகமாகவே வேலையிலிருந்து நீக்கியுள்ளோம். ஆனாலும் அவுட்சோர்ஸிங் முறையில் இவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் அளிக்க முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளது.
ஒரே நேரத்தில் பணியிழந்த 6500 பேரும் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மாற்று வேலைகளுக்கும் முயர்சித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications