3000 பேரை நீக்கும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ்
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் இந்நிறுவனத்தை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியது ஆரக்கிள் நிறுவனம். ஆனால் இந்த இணைப்பு முயற்சி எதிர்பார்த்த வேகத்தில் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதால், மாதம் ஒன்றுக்கு 100 மில்லியன் டாலர் அளவுக்கு சன் மைக்ரோசிஸ்டத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக ஆரக்கிள் சிஇஓ லாரி எல்லிசன் தெரிவித்துள்ளார்.
இந்த தாமதத்துக்கு அதிக பணியாளர்கள் இருப்பதும் ஒரு காரணம் என்பதால், இப்போதுள்ள ஊழியர்களில் 3000 பேரை நீக்கப்போவதாக அமெரிக்க பங்கு வர்த்தக மையத்துக்கு தெரிவித்துள்ளது சன் மைக்ரோசிஸ்டம்ஸ்.
இதன் மூலம் தற்போதைய ஊழியர் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாகவும், நஷ்டத்தின் அளவும் கணிசமாகக் குறையும் என்றும் இந்நிறுவனம் கருதுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரலுக்குள் இணைப்பு வேலைகளை முடித்துவிடுவதாக ஆரக்கிள் நிறுவனமும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications