ஸ்வைன்- இந்தியாவில் இதுவரை 427 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 427 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதன்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லி, கோவா, கேரளாவில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் புதன்கிழமை பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் நான்கு பேர் இறந்தனர்.

இவர்களையும் சேர்த்து இதுவரை பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 427 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று புதன்கிழமை மட்டும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆகும். இவர்களையும் சேர்த்து பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் தேசிய எண்ணிக்கை 13,030 ஆகும்.

இதுவரை இந்தியாவில் 68 ஆயிரத்து 919 பேருக்கு பன்றிக் காய்ச்சல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் 13,030 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதிதாக உறுதி செய்யப்பட்ட 61 பேரில் 12 பேர் கேரளத்தினர். தமிழகம், டெல்லியைச் சேர்ந்தவர்கள் தலா 11 பேர். மகாராஷ்டிரத்தினர் 10 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+