For Daily Alerts
Just In
குளிர்காலக் கூட்டத் தொடர் - நவ. 19ல் கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 19ம் தேதி தொடங்கி டிசம்பர் 22ம் தேதி முடிவடைகிறது.
இதுதொடர்பான முடிவு நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சரவைக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மொத்தம் 24 அமர்வுகளை இந்தக் கூட்டத் தொடர் கொண்டிருக்கும் என செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய நாடாளும்நற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்தார்.
வழக்கமாக குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் இறுதி வாரத்தில் தொடங்கி, கிறிஸ்துமஸுக்கு முன்பாக முடிவடையும். நான்கு வார காலத்திற்கு இக்கூட்டத் தொடர் நடைபெறுவது வழக்கமாகும்.
Story first published: Thursday, October 22, 2009, 9:04 [IST]