அதிமுகவுடன் கூட்டணியே இல்லை-சிபிஐ

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும். இதில் அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லை என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில்தான் நாங்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் ஏற்படும் உடன்பாடுதான், கூட்டணி அல்ல.
அதிமுகவுடனும் தொகுதி உடன்பாடு தான் வைத்திருந்தோம். அது கூட்டணி அல்ல. தேர்தல் நேரத்தில் அந்த அணி உருவாக்கப்பட்டது. தேர்தலோடு அந்த உடன்பாடு முடிந்துவி்ட்டது.
பொதுவான பிரச்சனைகளுக்காக இந்திய கம்யூனிஸ்டு எந்தக் கட்சியுடனும் இணைந்து போராடும்.
முல்லைப் பெரியாறு அணை இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை. இதை நீதிமன்றம் மூலமோ அல்லது இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலமோ தான் தீர்க்க வேண்டும். அதற்குரிய சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறந்து அண்ணன்-தம்பி உறவு மேம்பட்டது போல கேரளாவிலும் அந்த முறையை பின்பற்ற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்துக்கு எங்கள் கட்சி வருத்தம் தெரிவித்துகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிர்வாகத்தை பார்ப்பதை தவிர வேறு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவர் டெல்லியில் இருக்கும் நேரமே மிகக் குறைவு.
கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு உரிமையை பெற்றுத்தர திமுக வலியுறுத்தாமல் தட்டிக்கழிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications