Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொண்டாமுத்தூர் அகதிகள் முகாம்-பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே பூலுவம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு இலங்கையில் இருந்து கடந்த 1990-ம் ஆண்டு அகதியாக வந்தவர் சீனன். இவர் முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் கீர்த்தா (19).

இவரது தாய் மாமன் இலங்கையில் உள்ளார். தாய் மாமனிடம் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு உள்ளார். ஆனால் இலங்கையில் இருந்த தாய்மாமன் கீர்த்தாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் மனம் உடைந்த கீர்த்தா யாருக்கும் தெரியாமல் அரளி விதையை அரைத்து குடித்து உள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் கீர்த்தாவை மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கீர்த்தாவை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

கடன்-2 குழந்தைகளை எரித்து பெண் தற்கொலை:

இந் நிலையில் ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லை காரணமாக இரண்டு குழந்தைகளை எரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி வில்லிவிளையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அன்னம்மாள். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம செய்து கொண்டனர்.

திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வந்த அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரல்வாய்மொழி முத்து நகரில் குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு அபிநயா, என்ற மகளும், விஜய், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர்.

ராஜ் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோவாளையில் உள்ள ஒரு செங்கல் சூளை அதிபரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற ராஜ் திடீரென பணத்துடன் வீடடை விட்டு ஓடிவிட்டார்.

குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த அன்னம்மாளிடம் கடன் கொடுத்த செங்கல் சூளை அதிபர் பணத்தை திரும்ப தரும்படி வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவித்து வந்த அவர் கடன் தொல்லை காரணமாக மனம் உடைந்தார்.

இந்நிலையில் அன்னம்மாள் நேற்று விள்ளவிலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றார். அபிநயா சுகவீனமாக இருந்ததால் மருந்து வாங்குவதற்காக அவரது உறவினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அன்னம்மாள் மற்றும் அவரது மகன்கள் அபிஷேக், விஜய் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற உறவினர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டிற்குள் அன்னம்மாள், அபிஷேக், விஜய் மூவரும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், சப்-இன்ஸ்பெக்டர் கிளாரன்ஸ் மேரி ஆகியோர் சம்பவ இடம் சென்று உடல்களை மீட்டு ஆசாரி பள்ளம் மருத்தவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+