தயாரிப்பாளர் என்று கூறி பண மோசடி - பெண் கைது
தேனி: திரைப்படத் தயாரிப்பாளர் எனக் கூறி பண மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கீழ்விலாசம் சலீம் நகரைச் சேர்ந்தவர் ராகுல் (25). இவரிடம், போடி பெரியாண்டவர் ஹைரோடு, போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி (43), தன்னை சினிமா தயாரிப்பாளர் என கூறினார்.
இதை நம்பிய ராகுல், நத்தம் என்ற பெயரில் தான் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்ததைத் தெரிவித்தார். அந்தப் படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய ராஜேஸ்வரி, ராகுல் நடிப்பதாகக் கூறியதால் அவரிடம் படத்தயாரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டார்.
முதற் கட்டமாக மே 10 ல், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாவதாக மே 20 ல், 40 ஆயிரம் என மொத்தம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ராஜேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தினார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரி, சென்னை லாட்ஜில் தங்கி ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் ஒறு தொகையைக் காலி செய்தார். அதைத் தொடர்ந்து அப்படியே விட்டு விட்டார். படத் தயாரிப்பு தொடர்பாக எதுவுமே அவர் செய்யவில்லை.ய
இதனால், கொடுத்த பணத்தை ராகுல் கேட்ட போது தர முடியாது என்று ராஜேஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி, அவரது மகன் அருண்பிரசாத் மற்றும் நான்கு பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராகுல் புகார் செய்தார்.
புகாரைப் பெற்ற போலீஸார் ராஜேஸ்வரியைக் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications