வரதட்சணை வழக்கு-அதிமுக எம்பி செம்மலை விடுவிப்பு
சேலம்: மருமகள் தொடர்ந்த வரதட்சணைக் கொடுமை வழக்கில் இருந்து, சேலம் அதிமுக எம்பி செம்மலை மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி. இவரது மகள் வாணி பிரிதா .
இவருக்கும், சேலம் எம்.பி. செம்மலையின் மூத்த மகன் எழில் அமுதனுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந் நிலையில் வாணி பிரிதா, மேட்டூர் போலீஸில் கடந்த 26.1.2007 அன்று ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் எழில் அமுதன், மாமனார் செம்மலை, மாமியார் புஷ்பா ஆகியோர் தன்னிடம் வரதட்சணைக் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வரதட்சணையாக கொடுத்த நகைகளைப் பெற்று அடமானம் வைத்து விட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.
இதன்பேரில் எழில் அமுதன், செம்மலை, புஷ்பா ஆகியோர் மீதும் மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்பு இந்த வழக்கு ஈரோட்டுக்கும், தொடர்ந்து சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபால், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications