விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து!
விழுப்புரம்: பராமரிப்பு பணி காரணாக அந்த வழியாக செல்லும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் மாதம் 3ம் தேதி வரை விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லும் சில ரயில்கள் ஒரு பகுதியாகவும் சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுகின்றன.
வ.எண். 702/701: மதுரையில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் ரயில் விருத்தாச்சலம் முதல் விழுப்புரம் வரை இயங்குவது ரத்து செய்யப்படுகிறது. இந்த மாதம் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
வ.எண்.109/110: மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் ரயில் முண்டியம்பாக்கம் முதல் விழுப்புரம் வரை இயங்குவது ரத்து செய்யப்படுகிறது. இது இந்த மாதம் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை அமலில் இருக்கும்.
வ.எண். 116/115: பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் ரயில் இந்த மாதம் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்த மாதம் 31ம் தேதி முதல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை விழுப்புரத்தில் நடக்கும் பராமரிப்பு பணியின் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் 1 மணி நேரம் தாமதமாகவே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.