எல்லை விவகாரம்: இந்திய-சீன பிரதமர்கள் சந்திப்பு
ஹூவா ஹின் (தாய்லாந்து): இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சனை பூதகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவும் பேச்சு நடத்தினர்.
தாய்லாந்தில் ஹூவா ஹின் நகரில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபோ உள்பட 16 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அங்கு மன்மோகன் சிங்கை, சீன பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை, சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது அருணாச்சல பிரதேச விவகாரம், எல்லை ஊடுருவல்கள், சர்வதேச தீவிரவாதம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு பிரதமர்களும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது இந்தியாவுடன் வலுவான, நீடித்த நட்புறவையே விரும்புவதாக சீனா பிரதமர் வென்ஜியாபோ தெரிவித்தார்.
மேலும் மன்மோகன் சிங்கை மீண்டும் சந்தித்துப் பேசவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications