விமானத்தைத் தவற விட்ட பயணி விடுத்த குண்டு மிரட்டலால் பரபரப்பு
டெல்லி: டெல்லியிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பிய கோ ஏர் நிறுவன விமானத்தைத் தவற விட்ட பயணி அதைப் பிடிப்பதற்காக வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் அபினேஷ் குப்தா. மிகப் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
டெல்லியிலிரு்நது பெங்களூர் செல்லும் கோ ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து பெங்களூர் கிளம்பி விட்ட அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தை தனி இடத்திற்குக் கொண்டு சென்று தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொலைபேசி மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதில் அபினேஷ் குப்தா சிக்கினார்.
பெங்களூர் விமானத்தில் பயணிக்கவிருந்த அபினேஷ், அதை தவற விட்டு விட்டார். இதையடுத்து அதில் பயணிக்க விரும்பி விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளப்பி விட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள அபினேஷ் மீது பீதியை உருவாக்குதல், தவறான தகவல் அளித்தல் உள்ளிட்ட 3 புகார்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications