நக்சலைட்டுகள் வேட்டையில் நாய்ப்படையை ஈடுபடுத்த திட்டம்
டெல்லி: அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் நக்சலைட்களைக் கண்டறியும் பணியில் நாய்ப் படைகளை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் காவல்துறை சார்பில் நாய்ப் படைகள் அமைக்கப்படவுள்ளன.
வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறியவும், நக்சல்கள் பதுக்கி வைத்துள்ள வெடிபொருட்களைக் கண்டறியும், ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறியும் இந்த படையில் இடம் பெறும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு படையிலும் 12 நாய்கள் இடம் பெறும். அதில் ஐந்து நாய்கள், ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிக்கு உதவும். நான்கு நாய்கள் வெடிபொருட்களைக் கண்டறிய உதவும். 3 நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படும்.
அதேபோல நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதியிலும் நாய்ப் படைகள் ஈடுபடுத்தப்படும். இந்தப் படைகளில் ஐந்து நாய்கள் இடம் பெறும். அதில் மூன்று நாய்கள் வெடிபொருட்களைக் கண்டறிய உதவும், 2 நாய்கள் தேடுதல் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 1700 போலீஸ் துணைக் கோட்டங்கள் உள்ளன. இவற்றில் விரைவில் இந்த நாய்ப் படைகள் உருவாக்கப்படும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications