மீண்டும் முதல்வர்களாகும் பி.எஸ்.ஹூடா, அசோக் சவான், டோர்ஜி கந்து
மும்பை: மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவானும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடாவும், அருணாச்சல் பிரதேசத்தில் டோர்ஜி கந்துவும் 2வது முறையாக முதல்வர்களாக பதவியேற்கவுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில முதல்வராக மீண்டும் அசோக் சவானை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 2வது முறையாக முதல்வராகிறார் சவான்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை மாற்றியது காங்கிரஸ். விலாஸ் ராவ் தேஷ்முக் நீக்கப்பட்டு அசோக் சவான் முதல்வரானார்.
இந்த நிலையில் 9 மாதங்கள் கழிந்து நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து சவானே மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்ககப்பட்டது.
இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவிடம் வழங்கப்பட்டது. அவர் சவானையே மீண்டும் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்துள்ளார்.
கடந்த 9 மாத காலமாக அசோக் சவான், எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் செயல்பட்டு வந்ததாலும், தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தமைக்காகவும் அவருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பரிசாக அளித்துள்ளார் சோனியா.
ஹரியாணவில் ஹூடா...
இதற்கிடையே, ஹரியாணா மாநில முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா 2வது முறையாக பதவியேற்கவுள்ளார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இருப்பினும், 7 சுயேச்சைகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
கடந்த சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் இருந்தன. ஆனால் தற்போது அது 40 ஆக குறைந்து விட்டது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல், மீண்டும் ஹூடாவையே முதல்வாரக தேர்ந்தெடுததுள்ளார் சோனியா காந்தி.
கடந்த 37 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஹூடா, சாதாரண தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். படிப்படியாக உயர்ந்து முதல்வரானார். தற்போது 2வது முறையாகவும் முதல்வராகிறார்.
62 வயதாகும் ஜாட் இனத்தைச் சேர்ந்த ஹூடா, 1991ம் ஆண்டு லோக்சபா எம்.பியானார். அடுத்த ஆண்டில் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளையும் வகித்துள்ளார்.
ராணுவத்திலிருந்து மக்கள் மனதுக்கு...
இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்று, சமூக சேவகராக மாறி, பின்னர் அரசியலில் புகுந்து அருணாச்சல் பிரதேச சட்டசபைக்கு தொடர்ந்து 3 முறை போட்டியின்றி தேர்வாகி சாதனை படைத்து, முதல்வராக செயல்பட்ட டோர்ஜி கந்து மீண்டும் 2வது முறையாக அம்மாநில முதல்வராகிறார்.
அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 3ல் 2 மடங்கு இடங்களை வென்று அசத்தியுள்ளது.
முதல்வர் கநது போட்டியின்றி இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 முறையும் இவர் போட்டியின்றிதான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
54 வயதாகும் கந்து முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். ராணுவத்தின் உளவுப் பிரிவில் இடம் பெற்றிருந்தார். வங்கதேசப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ ஊடுறுவலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அதற்காக பதக்கம் பெற்றவர்.
இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் கந்து. தனது சேவைக்காக தங்கப் பதக்கம் பெற்றவர். பின்னர் மக்களுக்கு நல்லது செய்வதற்காக ராணுவத்திலிருந்து வந்த பின்னர் சமூக சேவையில் இறங்கினார்.
1980ம் ஆண்டில் அரசியல் பிரவேசம் செய்தார் கந்து. அருணாச்சல் பிரதேச மாநிலத்தை ஜெகாங் அபாங் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருக்கு அடுத்து அருணாச்சல் பிரதேச மக்களின் மனதில் இடம் பெற்றவர் டோர்ஜி கந்து என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications