வியட்நாமுக்கு சந்தைப் பொருளாதார அந்தஸ்து - இந்தியா வழங்கியது
ஹூவா ஹின் (தாய்லாந்து): வியட்நாமுக்கு சந்தைப் பொருளாதார அந்தஸ்தை வழங்கியிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய - ஆசியான் நாடுகள் கூட்டமைப்பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து வியட்நாமுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது இந்தியா.
இந்த ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் கையெழுத்தானது. இதுகுறித்து தாய்லாந்தில் நடந்த இந்திய - ஆசியான் மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) ரவி கூறுகையில், வியட்நாமுக்கு சந்தைப் பொருளாதார அந்தஸ்தை இந்தியா வழங்கியுள்ளது.
ஆசியான் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வியட்நாம் பிரதமர் நெகுயன் டான் டங், இதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார் என்றார்.
இந்த அந்தஸ்தின் மூலம், இந்தியா - வியட்நாம் இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள், விவரங்கள் இனிமேல் ஒளிவுமறைவின்றி கையாளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
