பைக்கை வழிறித்து ரூ.13 லட்ச வைரம் கொள்ளை
சென்னை: மோட்டார் சைக்கிளில் வந்த நகைக் கடை ஊழியரை, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், அவர் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிச் சென்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல வைர நகைக் கடை உள்ளது. இது மொத்தக் கடை ஆகும். சென்னையில் உள்ள பல்வேறு கடைக்காரர்கள் இங்கிருந்து நகைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இங்கு நகைகளை ஆர்டர் செய்வோருக்கு கார்களில் நகைகளைக் கொண்டு செனறு கொடுப்பது வழக்கம். ஆனால் நேற்று கடை ஊழியர் நிலேஷ் சுரானா என்பவர் ரூ.13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, கதீட்ரல் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
எழும்பூர் நாயர் பாலத்தை தாண்டி, உடுப்பி பாயிண்ட் சிக்னல் அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஊழியர் சுரானா வைத்திருந்த நகை பையை மின்னல் வேகத்தில் பிடுங்கி சென்று விட்டனர். அப்போது பின்னால் மாநகர பஸ் ஒன்று வந்ததால் கொள்ளையர்கள் எளிதில் தப்பி ஓடி விட்டனர்.
பஸ் மோதாமல் இருக்கவும், நகை பறிபோனதால் நிலைகுலைந்து போனதாலும், சுரானா மோட்டார் சைக்கிளை ஓரம் கட்டியபோது கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
மக்கள் நெரிசல் மிக்க, போக்குவரத்து மிகுந்த இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக எழும்பூர் போலீஸில் புகார் கொடுத்தார் சுரானா.
போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு சுரானா மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications