அழகு திருநாவுக்கரசை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடிக்கு பரிசுக் காசோலை வந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசுவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெயலலிதா ரூ.2 கோடிக்கு பரிசு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஏற்கனவே ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார். இதை நிராகரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
அதேபோல, தற்போது அழகு திருநாவுக்கரசையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்துக்கு எடுத்த வங்கி டிராப்டை அழகு திருநாவுக்கரசு, ஜெயலலிதாவுக்கு கொடுத்துள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது. 3 ஆண்டுகள் காலம்தாழ்த்தி மனு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியிருந்தது.
இதை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி முகமது இசாத் அலி வழக்கு விசாரணையை அடுத்த நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications