மதுரையில் அம்பேத்கார் சிலை அவமதிப்பு-பதற்றம்
மதுரை: மதுரையில் அண்னல் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதையடுத்து பதற்றம் நிலவுகிறது. 5 ஷேர் ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மருது பாண்டியரின் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை அவனியாபுரம் வழியாக நேற்று காலை ஏராளமானோர் சென்றனர்.
இந் நிலையில் அவனியாபுரம் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலையை நேற்று காலை யாரோ சிலர் அவமதிப்பு செய்து விட்டனர்.
இதையடுத்து ஒரு பிரிவினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் டிஎஸ்பி மயில்வாகனன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர் முனியாண்டி உள்ளிட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே சிலைக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த 5 ஷேர் ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து அப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பை-பாஸ் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே திரண்டு வந்தனர். ஆட்டோக்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதுகாப்புக்கு நின்றிருந்த டிஎஸ்பி மயில்வாகனனை முற்றுகையிட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
அப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications