எஸ்.எஸ்.சந்திரன் மீது கொலை மிரட்டல் வழக்கு
திருச்செந்தூர்: முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் கடந்த 20ம் தேதி அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அக் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரனும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும் மிக ஆபாசமாகப் பேசினர்.
இதுகுறித்து திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் கோபால் போலீசில் புகார் தந்தார். அதில்,
எஸ்.எஸ்.சந்திரன் தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் மிக ஆபாசமாக விமர்சித்துப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசும்போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மிக ஆபாசமாகத் திட்டினார்.
இவர்களது பேச்சு திமுக தொண்டர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆபாசமாக பேசி, முதல்வர் குடும்பத்தினருக்கும், அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் மீது மீது ஆபாசமாக பேசுதல் (294 பி), கொலை மிரட்டல் விடுத்தல் (506 (2)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருவரும் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications