கூடுதல் நேர மின்தடை-தொழிற்சாலைகள் பாதிப்பு
செங்கோட்டை: அறிவிக்கப்படாத மற்றும் கூடுதல் நேர மின்தடையால் ஆலங்குளம், செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு மில்கள் மற்றும் அரிசி ஆலைகளில் பணிகள் பெரிதும் பாதிககப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பகுதியில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வ்ட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்தடை நடைமுறையில் இருக்கிறது. இதிலும் பல நாட்கள் 7 மணி நேரம் என மின்தடை அறிவிக்கப்படாமல் 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது எவ்வித அறிவிப்பும் இன்றி கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது 8.30 மணி முதல் குறிப்பிட முடியாத நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் எந்த வேலையும் முழுமையாக செய்ய முடியுமா, எப்போது மின் சப்ளை வரும் அல்லது துண்டிக்கப்படும் என பொதுமக்கள் புலம்பும் நிலை உள்ளது.
மேலும் ஆலங்குலம், பாவூர்சத்திரம், செங்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு சாமில்களும், அரிசி ஆலை உற்பத்திகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மரம் அறுப்பு தொழிலாளர்கள் கூறும்போது நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் தான் அதிகமா சாமில்கள் உள்ளன. தூத்துக்குடிக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அறுப்பு பணி முடிந்து கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்களுக்கு நாள் கூலியாக ரூ. 100 முதல் ரூ. 225 வரை வழங்கப்படுகிறது. ஆனால் மின் தடையால் வேலையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications