நக்சல்களுக்கு எதிராக ராணுவம் - மமதா கோரிக்கையை நிராகரித்தார் அந்தோணி

கடைசி கட்டமாகத்தான் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்தோணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, நாட்டின் வேறு பகுதியாக இருந்தா3லும் சரி, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் கடைசி கட்டமாகத்தான் ராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்பது அரசின் கருத்து.
நக்சல் பாதித்த பகுதிகளில் கடைசி வாய்ப்பாகத்தான் ராணுவம் பயன்படுத்தப்படும்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் கையாள வேண்டும். மாவோயிஸ்ட நக்சலைட்டுகள் வன்முறையைக் கைவிட்டால்தான் பேச்சு நடத்த முடியும். இடதுசாரி தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நக்சலைட் தீவிரவாதம் மிகப் பெறும் மிரட்டல் மிரட்டல் என்பதில் சந்தேகம் இல்லை. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
நக்சலைட்டுகள் பாதித்த மாநிலங்கள், பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
ஆனால் இதைச் செய்யவில்லை என்பதற்காக வன்முறையை கையில் எடுப்பது பரிகாரமாகாது. சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை அரசு பொறுத்துக் கொள்ளாது.
மாவோயிஸ்ட் வன்முறை பாதித்த மாநிலங்களுக்கென மத்திய அரசு ஏற்கனவே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதை அமல்படுத்துவதை கண்காணித்து வருகிறது என்றார்.
காரைக்காலில் கடலோர காவல் நிலையம்
இதற்கிடையே, இந்திய கடல் பகுதியை பலப்படுத்த காரைக்காலில் புதிதாக கடலோர காவல் நிலையம் திறக்கப்படும். இந்தியா முழுவதும் கடலோர காவல் படைக்கு புதிதாக 3 ஆயிரம் வீரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு படையின் பொறுப்பு அதிகரித்து உள்ளது. கடலோர பாதுகாப்பில் அவர்கள் கூடுதலாக பங்கேற்க வேண்டியுள்ளது.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு படையின் வேலை முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கடலோர பாதுகாப்புப் படை சிறப்பான முறையில் செயல்பட வசதியாக ஏராளமான கப்பல்கள், விமானங்கள், கருவிகள், அடிப்படை கட்டுமான வசதிகள் செய்து தர மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
50 அதிவேக ரோந்து கப்பல்கள், 41 படகுகள், 12 கடலோர பாதுகாப்பு விமானங்கள் உள்ளிட்ட கூடுதல் வாகனங்கள், ஆயுதங்கள் வாங்கும் நடவடிக்கையில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 9 கடலோர காவல் மையங்களில் 46 நவீன ரேடார் கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
3 ஆயிரம் கடலோர காவல் படை வீரர்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் அவர்கள் படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
அகமதாபாத்தில் கடலோர காவல் படையின் மண்டல மையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காரைக்கால், மராட்டியத்தில் ரத்னகிரி, ஆந்திராவில் நிஜாம்பட்டினம், கர்நாடக மாநிலத்தில் கார்வார் உள்பட 9 இடங்களில் புதிதாக கடலோர காவல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்திய கடலோர பாதுகாப்பு படையை அடுத்த ஒரு சில ஆண்டுகளில் உலகிலேயே மிகச் சிறந்த பாதுகாப்பு படையாக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா ஈடுபடும் என்ற கேள்விக்கே இடமில்லை. மனிதாபிமான உதவிகள், நிவாரண உதவிகள், மறு சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையே இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications