பள்ளி வேன்-பஸ் மோதல்: மாணவி, டிரைவர் பலி
நெல்லை: பாளையங்கோட்டை அருகே பள்ளி வேன்-பஸ் மோதியதில் மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ளி மாணவியர் சிலர் ஒரு வேனில் பாளை கேடிசி நகரை அடுத்த தனியார் பள்ளிக்கு வந்தனர். வேன் பாளை கேடிசி நகரில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் வந்தது.
பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பத்தமடையை சேர்ந்த மாணவி கற்பகவள்ளி, வேன் டிரைவர் மாரிமணி ஆகிய 2 பேர் பலியாயினர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அரசின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. தாழையூத்து, பேட்டை, நாங்குநேரி, ஆலங்குளம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன. போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 27 பேரை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 2 மாணவிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications