தலிபான்களை விலைக்கு வாங்க அமெரிக்கா முடிவு

680 பில்லியன் டாலர் பாதுகாப்பு செலவீன சட்ட மசோதாவில் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். அதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் - தலிபான்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கி அணி மாற வைக்க முயன்றால் அந்த முயற்சியை ராணுவம் மேற்கொள்ளலாம் என்பது.
இந்தத் திட்டத்தை தலிபான்கள் கட்டமைப்பு தகர்ப்பு என்ற பெயரில் செயல்படுத்தப்படும். தற்போது இந்தத் திட்டத்திற்காக 1.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை, மனிதாபிமான நிவாரணப் பணிகள், மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றுக்கும் ராணுவத் தளபதிகள் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து செனட் சபையின் பாதுகாப்பு சேவை கமிட்டியின் தலைவரான கார்ல் லெவின் கூறுகையில், தலிபான் தலைவர்களிடமிருந்து முக்கிய தலிபான் தீவிரவாதிகளை பிரிப்பதே இதன் முக்கிய நோக்கம். இதன் மூலம், அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதலை குறைக்க முடியும்.
இதேபோன்ற திட்டம் ஏற்கனவே ஈராக்கில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் இதை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் பலரும், வேலை இல்லாதது, பணம் இல்லாதது போன்ற காரணத்திற்காகத்தான் தாக்குதலில் ஈடுபடுவதாக ஆப்கன் தலைவர்களும், அமெரிக்க ராணுவத்தினரும் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.
கொள்கை அடிப்படையிலோ, மத நம்பிக்கையின் அடிப்படையிலோ அவர்கள் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடவில்லை. பணம், வேலை இல்லாததே இப்படிப்பட்ட பாதைக்கு அவர்கள் மாறக் காரணமாக உள்ளது.
தலிபான் தலைவர் பணம் கொடுப்பதற்குப் பதில் நாம் கொடுத்தால் அதைப் பெறும் தீவிரவாதிகள் நிச்சயம் அணி மாற வாய்ப்பு உண்டு.
அதேசமயம், இப்படிப் பணம் பெற்று அணி மாறும் தீவிரவாதிகளுக்கு உரிய பாதுகாப்பு, அவர்களின் முந்தைய தவறுகளை மன்னிப்பு ஆகியவற்றையும் கூடவே செய்தால், அதற்கு உத்தரவாதம் இருந்தால் பல போராளிகளை ஈர்க்க முடியும் என்றார்.
அமெரிக்க அரசின் இந்தத் திட்டத்திற்கு ஆப்கானிஸ்தானில்
உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரியான ஸ்டான்லி மெக்ரிஸ்டல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களே. இவர்களின் தேவை பூர்த்தியாகாத நிலை இருப்பதால்தான் தீவிரவாதத்திற்கு மாறி வருகின்றனர் என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், கொள்கை ரீதியாக யாரும் தீவிரவாதிகளாக மாறவில்லை. அரசியல் காரணம், சமுதாயக் காரணங்களால்தான் இந்தப் பாதைக்கு அவர்கள் வருகின்றனர் என்றார்.
ஆனால் இந்தத் திட்டத்தால் தற்காலிகமாகத்தான் நமக்கு வெற்றி கிடைக்கும். இது நிரந்தரமாக நீடிக்கும் என்பதில் உத்தரவாதம் கிடையாது என்று ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் பிராந்தியத்துக்கான அமெரிக்க பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த நிக்கோலஸ் ஸ்மிடில் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications