ப்ரீபெய்ட் பிராட்பேண்ட் சேவை வழங்கும பிஎஸ்என்எல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ரீபெய்டு இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது பொதுதுறை நிறுவனமான பிஎஸ்என்எல்.

ப்ரீபெய்டு மொபைல் சர்வீஸ் போல, இந்த இன்டர்நெட் சேவையிலும் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிராண்ட் பேண்ட் சேவை தர எத்தனையே தனியார் நிறுவனங்கள் வந்தாலும், இன்றும் மார்க்கெட் லீடர் பிஸ்என்எல்தான். சில குறைகள் இருந்தாலும், பிஎஸ்என்எல் சேவையையே மக்களும் விரும்புகின்றனர்.

இப்போது மக்களுக்கு ப்ரீபெய்ட் முறையில் பிராட்பேண்ட் சேவை அளிக்க முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையை பெற பொருத்துதல் கட்டணம் ரூ.250 எனவும், மோடத்திற்கான விலை ரூ.1000 அல்லது ரூ.1600 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவில்லா தகவல் டவுன்லோடு செய்ய ரூ.300, ரூ.550, ரூ.1200 என 3 மதிப்புகளில் ரீசார்ஜ் செய்யலாம்.

ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால் 7 வாரங்களுக்கு அளவில்லாமல் பயன்படுத்தலாம். டவுன்லோடின் வேகம் 256 கேபி. ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 256 கேபியும், 15 நாள் என்றால் 512 கேபி, 7 நாள் என்றால் ஒரு எம்பி வேகம் இருக்குமாம்.

ரூ.1200 என்றால் 30 நாளுக்கு 512 கேபி, 15 நாளுக்கு ஒரு எம்பி, 7 நாளுக்கு 2எம்பி வேகம் இருக்குமாம். இவை தவிர குறிப்பிட்ட அளவில் இன்டெர்நெட் பயன்படுத்த டவுன்லோடு கூப்பன்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இவை ரூ.50 முதல் ரூ.5000 வரை பல மதிப்புகளில் கிடைக்கும். பயன்பாட்டு காலம் 7 நாள் முதல் 210 நாள் வரை. குறிப்பிட்ட காலத்துக்குள் தொகை தீர்ந்து விட்டால் ரூ.100, 200, 500க்கு டாப் அப் செய்து கொள்ளலாம். இந்த சேவையை பெற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+