தீவிரவாத சதி- அமெரிக்கரை விசாரிக்கும் இந்தியா
டெல்லி: லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து இந்தியாவில், தீவிரவாத செயலை நிகழ்த்துவதற்கான சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கரை விசாரிக்க இந்தியாவிலிருந்து உளவுப் பிரிவு குழு ஒன்று அமெரிக்கா செல்கிறது.
அடுத்த வாரம் இந்தியக் குழு அமெரிக்கா செல்கிறது. இக்குழுவில் ஐபி, ரா, ஆகியற்றின் அதிகாரிகள் இடம் பெறுவர்.
சமீபத்தில் அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு பிரஜையையும் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்து மும்பைத் தாக்குதலைப் போல இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக எப்.பி.ஐ தெரிவித்தது.
இந்த நிலையில் கோல்மேனை விசாரிக்க இந்தியக் குழு செல்கிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இதுகுறித்து எப்.பி.ஐயுடன் விவாதித்து வருகிறோம். இந்தியாவில் இதுதொடர்பாக என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இந்தியாவுடன் பல முக்கிய ஆவணங்களை எப்.பி.ஐ. பகிர்ந்து கொண்டுள்ளது. அங்குள்ள கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, புகார் மனு குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications